
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்குபதிலடி கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எதற்கெடுத்தாலும் நான் அனுபவமிக்கவன். நான் கடந்து வந்த பாதை யாருக்கும் தெரியாது என்று தனக்குத்தானே character certificate கொடுத்துக் கொள்ளும் எதிர்கட்சித் தலைவரே, நீங்கள் சொன்ன அந்த சேக்கிழ இராமாயணத்தை எப்போது தருவீர்கள். நீங்கள் படித்து முடித்து வீட்டில் பத்திரமாக வைத்துள்ள புத்தகங்களை எப்போது தருவீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதன் பிறகு பதவிக்காக ஊர்ந்து சென்ற கரப்பான் பூச்சிகளுக்கும் விஷந்துக்களுக்கும் நாங்கள் விஷ காளான்கள் தான் என்று கூறினார். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலினை நேற்று பெய்த மழையில் முளைத்த விஷ காளான் என்று விமர்சித்திருந்த நிலையில் தற்போது அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மா என்று திட்டங்களுக்கு பெயர் சூட்டியதில் தவறில்லை என்றபோது 94 வருடங்களாக கலைஞர் கருணாநிதி தமிழ் மக்களுக்காக உழைத்த நிலையில் அவருடைய பெயரை வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. இது தொடர்பாக நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்த நிலையிலும் எடப்பாடி பழனிசாமியால் அதனை ஏற்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.