
சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் வரதராஜபுரத்தில் உள்ளவர் சையது அமீன். இவருக்கு ரூபாய் 10கோடி மதிப்பில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் சையது அமீனின் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக காந்தம்மாள் என்ற பெண்ணின் பெயருக்கு மாற்றியுள்ளனர். இதை அறிந்த சையது அமீன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 2021ல் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி
கோவையில் சார் பதிவாளராக இருந்த மணிமொழியன் மற்றும் பத்திரப்பதிவு உதவியாளர்கள் லதா, சபரீஷ், கணபதி ஆகியோரை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து மணிமொழியன் கூறிய தகவலின் படி , அப்போது சென்னை தாம்பரத்தில் பணியாற்றிய மாவட்ட சார்பதிவாளர் டி.ஐ.ஜி ரவீந்திரநாத் தற்போது சேலம் மாவட்டம் சரக டி.ஐ.ஜி ஆக உள்ளார்.அவரது உதவியுடன் தான் போலி ஆவணங்களை தயாரித்து ஏற்கனவே கிரயம் செய்தது போல மாற்றி அமைத்தேன் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து சி.பி.சி.ஐ.டி, டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.