தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேரடியாக நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராமு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த காலங்களில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் வரை காலாண்டு விடுமுறை ஆனது விடப்படும். ஆனால் தற்போது செப். 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை 5 நாட்களுக்கு மட்டுமே காலாண்டு விடுமுறை ஆனது வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ‌ அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொது விடுமுறை.

இதனால் ஆசிரியர்கள் 2 நாட்கள் மட்டும்தான் காலாண்டு விடுமுறை இருப்பதாக கூறுகிறார்கள். இந்த காலாண்டு விடுமுறை முடிவடைந்து அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெள்ளிக்கிழமை மட்டுமே அடுத்து இயங்கும். அதன்பிறகு சனி ஞாயிறு விடுமுறை தினங்கள். எனவே அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் விடுமுறை வழங்க வேண்டும். இதன்மூலம் காலாண்டு விடுமுறை 9 நாட்கள் ஆகிவிடும். மேலும் காலாண்டு விடுமுறையை நீடிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் அது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.