
தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு தற்போது மக்கள் வெளி ஊருகளுக்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் 3-ம் தேதி முதல் பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட அதிக அளவு இயக்க முடிவு செய்து இருக்கின்றனர். அந்த வகையில் 478 பேருந்துகளின் 3 ஆயிரத்து 529 பயண நடைகளுடன் கூடுதலாக 250 பேருந்துகள் மூலம் 113 பயண நடைகள் இங்கிருந்து இயக்கப்படும்.
அது மட்டுமல்லாது தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதாவரம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்திகளின் இயக்கங்கள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதாக மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறப்பட்டிருக்கிறது.