
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஷபீர் முக்தர் ஷேக் என்பவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இதையடுத்து ஷபீர் முக்தர் ஷேக்கின் குடும்பத்தினர் அவரது மனைவியிடம் வரதட்சனை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளான்று ஷபீர் குடும்பத்தினர் அவரது மனைவியிடம் வரதட்சணை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து வாக்குவாதம் முக்கிய நிலையில் ஷபீரின் மனைவியை 6 வது மாடியிலிருந்து அவரது குடும்பத்தினர் கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அப்பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கினர்.
அதன்பின் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஷபீர் முக்தர் ஷேக் மற்றும் அவரது குடும்பத்தினர் என 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தவுடன் அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.