
இந்தியாவின்அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு பிரச்சனையின் காரணமாக மாணவர்கள் மத்தியில் கலவரம் வெடித்து பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தது. இந்த போராட்டம் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்த நிலையில் கலவரம் உச்சம் தொட்ட நிலையில் அதை சமாளிக்க முடியாமல் எந்த வித பதில் பதில் அளிக்க முடியாமல் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் அவர் நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதையடுத்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதோடு அங்கு வாழும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு தொடர்ந்து குரல் கொடுத்தது வருகிறது
இது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் வங்கதேசத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் தங்கி உயர்கல்வி படித்து வருகின்றனர். அதில் ஒரு மாணவி மைஷா மாஹ்ஜாபீன் என்ற மாணவி அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள NIT-யில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சஹாதத் ஹோசைன் என்பவர் இந்தியாவுக்கு எதிராக பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டார். இந்த பதிவுக்கு மாணவி மைசா லைக் செய்துள்ளார்.
இது அவருடன் படிக்கும் சக மாணவர்கள் அதிர்ச்சியை அடைந்தனர். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடனடியாக அந்த மாணவியை வங்கதேசத்திற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.
அதற்கு விருப்பம் தெரிவித்த மைஷா, கடந்த 27-ம் தேதி அவர் வங்கதேச எல்லையில் ஒப்படைக்கப்பட்டார். இந்த அசாம் NIT-யில் சுமார் 70 வங்கதேசம் மாணவர்கள் படிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.