தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தர்மபுரி மாவட்ட சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மருத்துவ குழுவினர் கம்பைநல்லூர் பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு சரவணன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது தான் அவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கம்பைநல்லூர் போலீசார் சரவணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.