
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த பவன் என்ற இளைஞர், என் மனைவி, என்னையும், என் 6 வயது மகனையும் கொலை செய்ய போகவதாக கூறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பவன், தேசிய சுகாதார இயக்கத்தில் ஒப்பந்த ஊழியராக மஹோபா மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.
அவரது மனைவி மவுரானிபுர் GGIC-யில் கிளார்காக பணிபுரிந்து வருகிறார். தற்போது, தம்பதிகள் இடையே இடையூறுகள் காரணமாக அவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். வீடியோவில் பவன் கூறியதாவது, “என் மனைவிக்கு வேறு ஒருவருடன் தவறான உறவு உள்ளது. நான் எதிர்ப்பு தெரிவித்தால், என்னை தவறாக பிரமிக்க முயற்சி செய்வதாக மிரட்டுகிறார். என்னையும், என் குழந்தையையும் நீல ட்ரம்மில் அடைத்து அழித்துவிடுவதாகவும் எச்சரிக்கின்றார்.
மேலும், செவ்வாய்க்கிழமை இரவு பவன் தனது மகனை வீடியோ கால் செய்ய முயன்றபோது, மனைவி ஒருவருடன் இருப்பதாக சந்தேகமடைந்தார். போலீசாரை அனுப்பியபோது, அந்த வீட்டில் கவுன்சிலர் ஒருவர் இருப்பது தெரியவந்தது. இதை வீடியோ எடுத்து பகிர்ந்த பொதுமக்கள் மற்றும் போலீசாரை அந்த கவுன்சிலர் மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.
झांसी साम को ड्यूटी सेआये व्यक्ति को लगा कि उसकी पत्नी के साथ कोई कमरे में है
112 पुलिस आई दरबाजा खटखटाई
महिला ने दरबाजा खोला तो अंदर से गुस्से के साथ प्रेमी निकला पुलिस के सामनें हंगामा शुरू कर दिया, सोंचिये अगर ड्यूटी से आया पति अंकेले ही मोर्चा संभाला होता तो क्या होता pic.twitter.com/mE9G2zTtEq
— जनाब खान क्राइम रिपोर्टर (@janabkhan08) April 10, 2025
பவன் மேலும் கூறியதாவது, “அவர் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம், ஆனால் என் மகனுக்கேதும் நேரக்கூடாது. எனக்கு அவர் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. நான் அவருடன் மீண்டும் வாழ முயன்றால், நாளை என் சடலம் ட்ரம்மில் கிடைக்கும் நிலை உருவாகலாம்” என கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக மவுரானிபுர் வட்டார காவல் அதிகாரி ராம்வீர் சிங் கூறியதாவது, “இந்த வீடியோவில் காணப்படும் நபர் ஒரு பெண்ணின் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்.
போலீசார் அவரை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அந்த பெண் வயிறு வலிக்கிறதென்று கூறி மருந்து கேட்கவே அழைத்ததாக கூறினார். இதுவரை எந்த தரப்பிலிருந்தும் அதிகாரபூர்வ புகார் பெறப்படவில்லை. விசாரணைக்கு பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.