
சத்தீஸ்கர் மாநிலம் கோண்டகானில் உள்ள பகுதியில் குடும்ப விழா ஒன்று கடந்த 12ம் தேதி நடைபெற்று. இந்த விழாவில் ஏராளமான குடும்பங்கள் கலந்துக்கொண்டனர். அப்போது அங்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 8 வயது சிறுமி உட்பட 16 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மற்ற 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சுகாதார அதிகாரிகள் உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அறிக்கைகள் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை பார்வையிட்டார். அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கிராமத்தில் ஒரு சிறப்பு சுகாதார முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு கிராம மக்கள் அனைவரும் பரிசோதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.