
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழ நான்காம் விதி சவர்மா கடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஹக்கீம்(49), அவரது மனைவி ஷர்மிளா பானு (40), மகன்கள் அப்துல் ரகுமான்(7), முகமது அஸ்லாம்(15), மகள் சுமையா ரிஸ்வானா(18) ஆகியோர் சிக்கன் ரோல் சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஐந்து பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அறிந்த உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் சம்பந்தப்பட்ட சவர்மா கடையில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கெட்டுப்போன சிக்கனை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் பிரவீன் குமார் கெட்டுப் போன 5 கிலோ சிக்கனை பினாயில் ஊற்றி அழித்தார். மேலும் சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்தார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.