இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா ரஞ்சி சீசனில் பெங்காலுக்காக ஆடினார். அதன் பின் இந்த சீசன் முடிந்ததும் அவர் இந்த கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவருக்கு இந்த சீசனில் விளையாட மனமே இல்லை என்றும் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி வற்புறுத்தியதால் விளையாடினேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெற்றுள்ளார். இந்திய அணியின் முக்கிய விக்கெட் கீப்பர்களுள் ஒருவராக இருந்த இவர் கடைசி போட்டியில் குஜாரத் அணிக்காக விளையாடினார்.