வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கார்பார்க் ஒன்றில், டெஸ்லா கார் ஒன்றை, காரின் சாவியை வைத்து சேதப்படுத்திய பெண், பிரபல ஃபிட்னஸ் பயிற்சியாளர் கமீலியா என்ஸ்லர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மார்ச் 20ம் தேதி இசாக்வா காமன்ஸ் ஷாப்பிங் மாலில் இந்த சம்பவம் நடைபெற்றது. தற்போது சமூக ஊடகங்களில் இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

 

வீடியோவில், டொயோட்டா காரில் இருந்து இறங்கிய கமீலியா, டெஸ்லா மாடல் Y காரை சேதப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது. தகவலின்படி, காரின் டிரைவர் அந்த இடத்தை விட்டு பின்செல்லும் போது, கமீலியா கோபத்தில் காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்காக கமீலியா மீது வொஷிங்டன் மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனர் ஏலான் மஸ்க், இந்த வீடியோவை பார்வையிட்டு “Shame on them” என X தளத்தில் கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவம், மஸ்கின் அரசியல் தொடர்புகளை முன்னிட்டு டெஸ்லா வாகனங்கள் அடிக்கடி குறிவைக்கப்படுவது போல இல்லையென்றும், இது தனிப்பட்ட கோபத்தின் விளைவாக ஏற்பட்டதென்றும் Daily Mail தெரிவித்தது.

 

கமீலியா என்ஸ்லர், ஐபீக் ஃபிட்னஸ் என்ற ஃபிட்னஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கோடிக்கணக்கான சொத்துகளின் உரிமையாளர் ஆவார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த நிறுவனம் தனது சமூக வலைதளங்களில் அவருடைய தொடர்பை நீக்கிவிட்டது. மேலும், கமீலியா தனது லிங்க்ட்இன் ப்ரொஃபைலையும் நீக்கியுள்ளார். அவர் கணவர் ஜெஃப் என்ஸ்லர், டாக்குஸைன் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் $1.5 மில்லியன் மதிப்புள்ள பெல்வ்யூ வீட்டு சொத்தை 1998ஆம் ஆண்டு வாங்கியிருந்தனர்.