
பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா கேட்ட கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சமீபத்தில் India’s Got Talent என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், உங்கள் வாழ்நாள் முழுவதும் பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு செய்து கொள்வதை பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்தி விட்டு ஒருமுறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா? இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதற்கு கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் மீது மகாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ரன்வீர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆபாசமாக பேசுவது நகைச்சுவை கிடையாது. இவ்வழக்கில் எவ்வாறு நிவாரணம் கூற முடியும் என்று கண்டனம் தெரிவித்தார். இடைக்கால தடையானை பிறப்பித்து அவரது கைது நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அவருடைய பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து ரன்வீர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தார். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சிறிது காலத்துக்கு தொலைபேசி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.