நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைக்கம்பட்டி கிராமத்தில் விவசாயியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜ்குமார் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றார். இதனையடுத்து மறுநாள் காலை ராஜ்குமாரின் மனைவி சோனியா தனது கணவரின் அறைக்கு சென்று பார்த்தார்.
அப்போது தனது கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ராஜ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ராஜ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்