
சத்தீஸ்கர் மாநிலம் ஜான்ஜ்கிர்-சம்பல் பகுதியை சேர்ந்தவர் சல்மான் அலி. இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இந்த தம்பதிக்கு 9 வயதில் அலீனா பர்வீன் மற்றும் 8 வயதில் அலிஷா பர்வீன் என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளும் ஒரே பொம்மைக்காக சண்டையிட்டுள்ளனர். இதை பார்த்து கோபத்தின் உச்சிக்கு சென்ற சல்மான் அலி தனது மகள்களை மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளார். குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயமடைந்த சிறுமிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு எட்டு வயது சிறுமியான அலிஷா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அலினா கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சல்மான் அலியை கைது செய்துள்ளனர்.