ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன் நகர் பகுதியில் 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இவருடைய பாட்டி உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் திடீரென இறந்துவிட்டார். இந்நிலையில் சிறுமிக்கு தேர்வு இருந்த காரணத்தினால் சிறுமியின் தந்தை தன்னுடைய நெருங்கிய நண்பரான வார்ஸ் அலி என்பவரிடம் தனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல கூறினார்.

அதன்படி அந்த சிறுமியும், அவளது சகோதரியும் வார்ஸ் அலியுடன் பள்ளிக்கு சென்றனர். தேர்வு முடிந்த பிறகு சிறுமியின் தந்தை சகோதரிகளை அழைத்து வர தனது மகனை அனுப்பி வைத்தார். அப்போது வார்ஸ் அலி மாற்றுத்திறனாளியான அந்த சிறுமியை மட்டும் தனியாக காரில் அழைத்துச் சென்று வெறிச்சோடிய இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இரங்கல் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய சிறுமி தன் பெற்றோரிடம் தாங்க முடியாத மனவேதனையுடன் நடந்ததை கூறினார்.

தனது இயலாமையை பயன்படுத்தி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது குறித்து யாரிடமும் பேசக்கூடாது எனவும் மிரட்டினார் என்று கூறினார். இதனை கேட்டு சிறுமியின் தந்தை அதிர்ச்சியடைந்த நிலையில் காவல் நிலையத்தில் வார்ஸ் அலி மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் 24 மணி நேரத்தில் அவரை கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.