
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான, எடப்பாடி பழனிச்சாமி, இயேசு கிறிஸ்துவின் முக்கிய சீடர்களின் ஒருவரான யோவான் என்பவர் எழுதியுள்ள சுவிசேஷ நூலில், உலகத்திலேயே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்க வைக்கின்ற ஒளியே… அந்த மெய்யான ஒளி…. என்ற இறைவன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது….
இதன் அர்த்தம் உலகத்தில் உள்ள இருளை அகற்றி, வெளிச்சம் தருகின்ற உண்மையான ஒளியை திகழ்வார் ஏசு கிறிஸ்து என்பதாகும்… எனவே இயேசு கிறிஸ்து இருளை அகற்றி நம் வாழ்வில் ஒளியை தருகின்றார், பாவங்கள் அகற்றி பரிசுத்தத்தை தருகின்றார்… தீமையிலிருந்து நம்மை விலக்கி… நல்வழியில் நடத்துகின்றார்…. எனவே தான் அவரது பிறப்பு நாளாகிய கிறிஸ்மஸ் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நன் நாளாக திகழ்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் நான் ஒரு சிறிய கதையை சொல்ல விரும்புகின்றேன்.
ஒரு விவசாயிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மகன் மிகவும் தந்திரசாளி, தீயவன். இளைய மகன் மிகவும் அப்பாவி, நல்லவன். ஒவ்வொரு நாள் காலையும் தந்தை தன் இரு மகன்களையும் அழைத்து….. வயலுக்குச் சென்று விவசாய வேலையை பார்த்து வருமாறு அனுப்பி வைப்பது வழக்கம். அவர் வயலுக்கு சென்ற பிறகு, தனது நெல் மண்டியை கவனிக்க தந்தை சென்று விடுவார்…. அப்பாவியான இளைய மகன்,
தன் தந்தை சொல்லியபடியே நேராக வயலுக்கு சென்று…. கடினமாக உழைத்துவிட்டு, களைப்பு நீங்க தினமும் சாய்ங்காலம் கிணற்றிலே…. குளித்துவிட்டு சுத்தமாக வீடு திரும்புவது வழக்கம்…. ஆனால் மூத்த மகன் தந்திரசாலி, வயலுக்கு சென்று உழைப்பதற்கு பதிலாக…. தந்திரமாக தன் தம்பியிடம் எனக்கு உடல் சுகம் இல்லாமல் இருக்கிறது… எனது வேலைகளை நீயே செய்து விடு தம்பி என்று அன்பாக பேசுவார்… அதற்குப் பிறகு தனது நண்பருடன் தீய செயலில் ஈடுபட்டு, பொழுதை கழிப்பார்.
மாலை நேரம் வந்ததும் கடினமாக தான் வேலை செய்தது போல…. தன் தந்தையை நம்ப வைக்க உடல் முழுவதும் சேறும்சகதியுமாக வீடு திரும்புவார். இதை தினசரி கவனிக்கும் தந்தை…. ஏதோ மூத்த மகன் தான் கஷ்டப்பட்டு, நம் குடும்பத்திற்காக உண்மையாக உழைக்கின்றான் என்று நம்பி வந்தார். ஆனால் இளைய மகன் தன்னுடைய சொல்லை கேட்காமல், குடும்பம் முன்னேற்றத்திற்காக எதிராக இருக்கிறார்….
உண்மையான உழைப்பாளியான அப்பாவி இளைய மகன் மீது கோபம் கொள்வார். எனவே பண்டிகை நாட்கள் வரும்போது தந்திரசாலியான மூத்தவனுக்கு செல்வத்தை அள்ளி அள்ளி கொடுப்பார் தந்தை. ஆனால் அப்பாவியான உண்மை உழைப்பாளியான இளைய மகனுக்கோ கிள்ளி தான் கொடுப்பார் தந்தை. ஆனாலும் இளைய மகன் தன் தந்தை மீது சிறிதும் கோபம் கொள்ளாமல்… பாசத்தோடு நடந்து கொள்வார்….. என்றைக்காவது ஒருநாள் நான் தந்தைக்கு உண்மை தெரியவரும் என்று பொறுமையோடு தனக்கு விட்ட பணியை இளைய மகன் உண்மையாக செய்து வந்தான்.
ஒரு நாள் இளைய மகன் வயல் வேலை செய்து கொண்டிருக்கின்ற சமயத்தில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டதன் காரணமாக ஒரு சில மாதங்கள் வயலுக்கு சென்று அவரால் உழைக்க முடியவில்லை…. இதனால் வயலில் பயிர்களுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல், கலை பிடுங்குதல் போன்ற அன்றாட பணிகள் மற்றும் அறுவடை ஆகியவை பாதிக்கப்பட்டன. எனவே மூத்த மகன் வயலுக்குச் சென்று கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உருவானது. ஆனால் மூத்த மகனுக்கு இதுவரை வயலுக்கு சென்று விவசாய பணிகளை மேற்கொண்ட அனுபவம் இல்லாததால்…. அந்த பருவத்தில் விளைச்சல் மிகவும் குறைந்துவிட்டது.
அப்போதுதான் இளைய மகனின் உண்மையான உழைப்பும், மூத்த மகன் சோம்பேறியாக பொழுதை கழித்து தன்னை ஏமாற்றிய உண்மை தந்தைக்குப் புரிந்தது. உண்மை புரிந்த உடன்… இளைய மகன் மீது அதிக பாசத்தை பொழிந்தார்… அத்துடன் மூத்த மகனுக்கு அறிவுரைகள் வழங்கி திருத்துவதற்கான முயற்சியையும் தந்தை மேற்கொண்டார். இன்றைய உலகத்தில் பெரும்பாலானோர் இப்படித்தான் உள்ளனர் என தெரிவித்தார்.