சென்னையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென தன்னுடன் வந்து சிறுவனை தூக்கி போரூர் ஏரிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது மீன் பிடித்து கொண்டிருந்த நபர்கள் உடனடியாக நீச்சல் அடித்து சென்று சிறுவனை பத்திரமாக மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனை அவரது தந்தையான தலைமை செயலக காலனியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரே ஏரியில் வீசி சென்றது தெரியவந்தது. மனைவியிடம் சண்டை போட்டு அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மகனை அழைத்து வந்து ஏரியில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதனால் தப்பி ஓடிய மோகன் ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.