
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த ஒரு தீர்ப்பில் பாலியல் குற்றத்தில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக கொலை செய்யும் நபர்களுக்கு இந்திய அரசு தண்டனைச் சட்டம் ஐபிசி பிரிவு 97 படி தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறியிருந்தது. அந்த வகையில் 21 வயதான தனது மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டார். அப்போது மகளை பாதுகாப்பதற்காக தாய் தன் கணவனை மர கத்தியால் குத்தினார். ஆனாலும் அடங்காத தந்தை மீண்டும் தனது மகளை பாலியல் தொல்லை செய்ய ஆரம்பித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மகளின் தாய் ஒரு சுத்தியலை பயன்படுத்தி அவர் தலையில் அடித்த நிலையில் கீழே விழுந்த கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் தலையில் ஏற்பட்ட காயம் மற்றும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை பரீசிலித்த நீதிமன்றம் அந்தப் பெண் தனது தற்காப்புக்காக தான் இந்த கொலையை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது . இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜி ஜெயச்சந்திரன், ஒற்றை நீதிபதி பெஞ்ச், கொலைக்கு 302 பிரிவின் கீழ் பெண்ணின் மீது வழக்கு தொடர்ந்தது தவறானது என்று முடிவு செய்தது. மேலும் அந்தப் பெண்ணின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் மீதான கொலை குற்றசாட்டை ரத்து செய்தது.