
தமிழில் வருகிற பிப்,.3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.
மைக்கேல்
ரஞ்சித் ஜெயக்கொடி டைரக்டில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பிப்,.3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தி கிரேட் இந்தியன் கிச்சன்
மலையாளத்தில் சென்ற ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தின் தமிழ் ரீமேக். கண்ணன் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
ரன் பேபி ரன்
ஆர்.ஜே.பாலஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “ரன் பேபி ரன்”. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார்.
தலைக்கூத்தல்
லென்ஸ் திரைப்படத்தின் வாயிலாக கவனம் ஈர்த்த ஜெய பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி மற்றும் கதிர் இப்படத்தில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
பொம்மை நாயகி
பா.ரஞ்சித் தன் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு முதன்மை வேடத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை ஷான் இயக்கியுள்ளார். இந்த படமும் பிப்,.3-ஆம் தேதி ரீலிஸ் ஆகிறது.
குற்றப்பின்னணி
ராட்சசன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரவணன், தற்போது நாயகனாக நடித்துள்ள படம் “குற்றப் பின்னணி”. என்.பி.இஸ்மாயில் இயக்கி இருக்கும் இப்படத்தில் தீபாளி, தாட்சாயினி, சிவா உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர்.
நான் கடவுள் இல்லை
பிரபல டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் நீண்ட இடைவேளைக்கு பின் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், சரவணன் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படமும் வரும் பிப்,.3 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.