சென்னையில் பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த “ரூ” இவர்களுக்கு எப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. தமிழ்நாட்டை எத்தனை முறை ஆட்சி செய்திருக்கிறார்கள். எத்தனை முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திடீர் பற்று எங்கிருந்து வந்தது. தமிழகத்தில் உள்ள அத்தனை குற்றங்களையும் மறைப்பதற்கு இவர்களுடைய மரபணுவே தேச ஒற்றுமைக்கு எதிரானது.

இவையெல்லாம் சுயநலமான நடவடிக்கைகள். தங்களுக்கு வேண்டும் என்றால் கச்சத்தீவை கூட கொடுத்து விடுவார்கள். இவர்களது ஒவ்வொரு அரசியல் நாடகமும் சுயநலம் மிகுந்த நாடகம். இன்று திடீரென்று இவர்களுக்கு தமிழ் பற்று வந்துள்ளது. தேசிய அளவில் பின்பற்றுவதை தொடருவதே கூட்டாட்சி என்பதாகும். பாஜக ஒன்னும் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல. உங்களைப் போல நாடகமாடும் தமிழ் பற்றுக்கு எதிரானவர்கள் என்று தெரிவித்தார்.