அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி காலனி தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆசியா என்ற பெண்ணும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 10-ஆம் தேதி இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த செல்வராஜின் தம்பி பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்ததால்…. இருதரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஐயோ மாட்டிக்கிச்சே “… உண்டியலில் கை சிக்கி விடிய விடிய திணறிய நபர்… காலையில் நடந்த டுவிஸ்ட்…!!
தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(42). அந்த கிராமத்தில் பெரியாண்டியாச்சி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தங்கராஜ் திருட சென்றுள்ளார். அங்கு கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதற்காக தங்கராஜ் கையே உள்ளே விட்டபோது அவரது…
Read moreசுற்றுலா சென்ற மாணவர்கள்… பெற்றோர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!!
சென்னை மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் தனியார் பிசியோதெரபி கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர். கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு கல்லூரியிலேயை தங்கினார். பின்பு…
Read more