
செய்தியாளர்கள் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஸ்டாலின் ஒன்னும் அரிச்சந்திரன் கிடையாது. அவர் சொல்கின்ற வார்த்தை எல்லாம் அப்படியே தங்க எழுத்தில் வராது. திமுக , அதுவும் கருணாநிதி குடும்பமும் பொய் சொல்வதற்கே பெயர் போனது. கதை – திரைக்கதை – வசனம் எழுதுவதில் வல்லவர்கள்.
ஜெயலலிதா அம்மாவுக்கு அன்னைக்கு நடந்த சம்பவம்… இன்னைக்கு வார்த்தையை மாற்றி பேசுகின்ற திருநாவுக்கரசு கொடுத்த பேட்டி அனைத்து ஊடகங்களிலும் – பத்திரிகைகளும் வந்து இருக்கிறது. பல்வேறு பத்திரிக்கை துறையைச் சார்ந்தவர்களும், மூத்த பத்திரிக்கையாளர்கள் பேட்டி அளித்திருக்கிறார்கள். இன்றைக்கும் பேட்டி அளித்திருக்கிறார்கள்.
இன்று கையிலே அதிகாரத்தை வைத்திருக்கின்ற முதல்வர் ஸ்டாலின் அப்படி அந்த சம்பவம் நாடகம் என்று சொன்னால் ? இன்றைக்கு அதை நாங்கள் உண்மை என்று சொல்லுகின்ற… நிர்மலா சீதாராமன் உட்பட, அன்றைக்கு பத்திரிக்கையிலே வெளியிட்ட ஊடகங்கள் , பத்திரிகை நிறுவனங்கள் மீது வழக்கை பதிவு செய்வதற்கு இந்த ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா ? வழக்கை பதிவு பண்ண சொல்லுங்க பார்ப்போம் என தெரிவித்தார்.