தமிழகத்தில் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதி உதவி வழங்கப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, 100 புதிய தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்.

27 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ரூ. 18.7 கோடியில் புதுப்பிக்கப்படும். அதன் பிறகு தூத்துக்குடியில் அதிநவீன வசதியுடன் ஐஎஸ்ஐ மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை கட்டுவதற்கு ரூ. 138.54 கொடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.