நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் வறட்சியான காற்றும் வீசுகிறது. இந்நிலையில் குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள வண்டி சோலையிலிருந்து பாரன்ட்டேல் வழியாக ராணுவ கல்லூரிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் வறட்சி நிலவி வருகிறது.

நேற்று முன்தினம் திடீரென ஒரு மரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது இது பற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் மற்ற மரங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.