
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஷ்வரன்பட்டியில் நூல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் டீ குடிப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது தொழிற்சாலையில் இருந்த காட்டன்கள், நூல்கள் போன்றவற்றில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் அவர்களால் தீயை அணைக்க இயலவில்லை. இதுகுறித்து அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.