கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. அதன் அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று மதியம் மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்களும் தீயணைப்பு வீரர்களும் மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சாலையில் உள்ள மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.