கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சியும் துப்புரவு பிரிவுக்கான சேமிப்பு குடோன் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நகராட்சி அலுவலக குடோனில் பற்றி அறிந்து தீயை போராடி அணைத்தனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளீச்சிங் பவுடர், பினாயில், கொசு மருந்து, கொசு மருந்து அடிக்கும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என் முருகன், ஆணையாளர் கீதா உள்ளிட்டார்  நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.