சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மின்கசிவால் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த காவலாளி சண்முகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் முதலில் மின் இணைப்பை துண்டித்தனர். இதனையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தற்போது பொது தேர்வு நடப்பதால் தீயில் எரிந்த மின்சாதன பொருட்களை உடனடியாக மாற்றி புதிய மின்சாதன பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.