திரையரங்கில்  ரசிகர்களால் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வேகமாக பரவி வரும் அந்த வீடியோவில், ஒரு திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசுகளை தொடர்ந்து வெடிப்பதால் அங்குள்ள பொதுமக்கள் அங்கும் இங்கும்  ஓடும் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோ முதலில் ஹாலிவுட் படமான “மினி கிராஃப்ட் மூவி” என்ற படம் திரையரங்கில் வெளியான போது நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த வீடியோ கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் மோகன் சினிமாஸ் திரையரங்கில் வெளியான பாலிவுட் திரைப்படத்தின் போது நடைபெற்றது என்பதை சிலர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் “டைகர் 3” திரைப்படத்தின் திரையிடலின் போது குறிப்பாக நடிகர் சல்மான்கானின் ரசிகர்கள் சிலர் சினிமா திரையரங்கில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர் என்பதனை உறுதி செய்தனர். மேலும் தவறான செய்தி பரப்புவதையும் கண்டித்துள்ளனர்.

இந்த வீடியோவில் ஹாலிவுட் திரையரங்கில் நடைபெற்றதாக கூறப்பட்டிருந்த பதிவு தவறானது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து 13,000 லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.