பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ்குமார். இவர் நேற்று முன்தினம் ஒரு மீன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதாவது அமரப்பூர் பகுதியில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீன் கண்காட்சியை முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்த காரில் கிளம்பி சென்றார். அங்கு பயோ பிளாக் தொட்டியில் மீன்களுக்கு அவர் உணவு கூட வழங்கினார்.

இந்நிலையில் முதல்வர் அங்கிருந்து கிளம்பி அடுத்த கணமே பொதுமக்கள் தொட்டிக்குள் கிடந்த மீன்களைப் பிடிக்க போட்டி போட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அங்கு காவலுக்கு யாரும் இல்லாத நிலையில் மக்கள் போட்டி போட்டு மீன்களை அள்ளி செல்கிறார்கள். அதோடு நாங்கள் மீன்பிடிப்பதற்காக தான் வந்தோம். முதல்வர் நிதீஷ் குமாரை பார்ப்பதற்காக வரவில்லை என அங்குள்ளவர்களில் சிலர் கத்துகிறார்கள். மேலும் இதைத் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.