சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான ராணுவத்தின் 92 வது நிறைவு ஆண்டு விழா நடைபெற்றது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சி என்பதால் இந்த விமான சாகச விழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இதனால் மெரினா கடற்கரையே தெரியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாகியதால் மக்கள் பலரும் நெருசலில் சிக்கி அவதியற்றனர்.இந்த நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் போன்றவற்றால் சென்னையின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது இணையதள பக்கத்தில் கூறியதாவது, இந்திய ராணுவ வான்வெளி சாகச விழாவை காண வந்த மக்கள் ஐந்து பேர் உயிரிழந்ததும், 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.பொதுமக்கள் கூடும் இடங்களில் போதுமான குடிநீர் வசதி,கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை கூட முறையாக செய்வதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகளை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளம்பரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட பொதுமக்களுக்கு அளிப்பதில்லை எனக் கூறியுள்ளார். பொதுமக்களின் உயிரைக் குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் பல குடும்பங்களின் பரிதவிப்புக்கு காரணமான திமுக அரசை கண்டிக்கிறேன். பல லட்சம் மக்கள் கூடும் இடங்களில் முன்னேற்பாடுகளை செய்ய தவறிய தமிழக அரசே இந்த உயிர் இழப்புகளுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும் எனவும் தெரிவித்தார்.