
இந்தியாவைப் பொறுத்த வரையில் மக்கள் பலரும் பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வங்கியிலும் வட்டி விகிதம் மாறுபடும். குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வங்கிகளிலும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் அதிக அளவிலான வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மூன்று ஆண்டுகால பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு இந்தியாவின் ஐந்து முன்னணி வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகின்றன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் 7%, மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியை வழங்குகிறது.
பேங்க் ஆப் பரோடா வங்கி 7.15 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீதம் வட்டியும் வழங்குகின்றது.
அதனைப் போலவே கோடக் மகேந்திரா வங்கி 7 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
எஸ்பிஐ வங்கி 6.75 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டியும் வழங்குகின்றது.