
தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யறது என்பது தற்போதைய மக்களுக்கு ஒரு நாகரிகமான செயலாக மாறிவிட்டது. தன்னுடைய தேவைக்கு அப்பாற்பட்ட பணத்தை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போட்டால் வேகமாக பணம் அதிகமாகும் என்ற நோக்கத்தில் பலரும் வங்கிகளில் திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அது மட்டும் இன்றி இது ஒரு பாதுகாப்பான திட்டம். இந்நிலையில் எந்தெந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அதிகமான வட்டி கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 444 நாட்களுக்கு 7.45 சதவீதம் வட்டி கிடைக்கிறது. ஒரு வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.85 சதவீதம் கிடைக்கிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 333 நாட்களுக்கு 7.40% வட்டி கிடைக்கும்.
பாங்க் ஆப் பரோடாவில் 399 நாட்களுக்கு 7.30 சதவீதம் வட்டி கிடைக்கிறது. ஒரு வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 6.85 சதவீதமும், மூன்று வருடத்தில் 7.15% வரை இருக்கும். இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 5 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 4 44 நாட்களுக்கு இந்த திட்டத்தில் 7.30% வட்டி தருகிறது. 1 வருடத்திற்கான FD திட்டத்தில் 7.10%, நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7.3% வட்டி கிடைக்கிறது.
பஞ்சாப் & சிந்து வங்கியில் 666 நாட்களுக்கான பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 7.30% வட்டி விகிதம் கிடைக்கிறது.