தமிழகத்தில் வருகிற 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அங்கு செல்வார்கள். அதோடு முக்குலத்தோர் பலரும் பசும்பொன்னுக்கு படையெடுப்பார்கள். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகிற 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும் நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா அம்மையார் வழங்கிய தங்க கவசம் அதிமுக பொதுச்செயலாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகிற 30-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னுக்கு செல்வதாக தற்போது அதிமுக அறிவித்துள்ளது. மேலும் இதற்காக அதற்கு முந்தைய தினம் மதுரைக்கு செல்ல இருக்கிறார். அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.