
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாவது உறுதியாகிவிட்டது. சென்னை பாஜக தலைமையகத்தில் இன்று நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவரது பெயரை அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பரிந்துரை செய்துள்ளனர்.
மற்ற தலைவர்கள் யாரும் விருப்ப மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால் போட்டி இல்லாமல் பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாவது உறுதி ஆகியுள்ளது
இந்த நிலையில் அண்ணாமலைக்கு பாஜகவில் தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மாநிலத் தலைவராக கட்சிக்கு அண்ணாமலை அளப்பரிய பணிகள்செய்துள்ளதாகவும், கிராமந்தோறும் பிரதமர் மோடியின் கொள்கைகளை கொண்டு சென்றுள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.
கட்சியின் தேசிய அளவிலான பணிகளுக்கு அண்ணாமலையின் திறமையை பாஜக பயன்படுத்தும் என அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.