
டெல்லி உயர்நீதிமன்றம் விக்கிபீடியா தளத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை எனில் உடனடியாக தடை செய்ய அரசுக்கு உத்தரவிடப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் விக்கிபீடியா தளத்தை எச்சரித்துள்ளது. அதாவது விக்கிப்பீடியாவின் ஏஎன்ஐ பக்கத்தில் பிரச்சார தளம் என 3 பேர் எடிட் செய்திருந்தனர். இ
ப்படி எடிட் செய்தவர்கள் யார் என்ற தகவலை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என விக்கிபீடியாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் விக்கிப்பீடியா அதற்கு பதில் வழங்கவில்லை. மேலும் இதன் காரணமாக விக்கிபீடியா தளத்தை எச்சரித்த உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசையும் அனுப்பியுள்ளது.