
தமிழக அரசின் போக்குவரத்து கழகம் இனி அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை கட்டாயம் என்று அறிவித்துள்ளது. அதாவது ஊழியர்கள் சிலர் சரியான நேரத்தில் பணிக்கு வருவது கிடையாது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததால் தற்போது அரசாங்கம் அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை கட்டாயமாக்கியுள்ளது.
அதன்படி அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பளம் வேண்டும் என்றால் கண்டிப்பாக பயோமெட்ரிக் வரவை பதிவேடு செய்வது அவசியம். மேலும் இந்த புதிய நடைமுறை இன்று முதல் சென்னையில் நம்மளுக்கு வந்துள்ள நிலையில் விரைவில் தமிழக முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.