தமிழக பாஜக கட்சியின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை நேற்று அமித்ஷா வெளியிட்டார். தென் மாவட்டத்திலிருந்து முதல் முறையாக பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். கிட்டதட்ட 8 வருடங்களாக இவர் பாஜக கட்சியில் இருக்கும் நிலையில் நெல்லையில் முடி சூடா மன்னனாக திகழ்ந்து தொடர்ந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று சென்னை கமலாயத்தில் பாஜக மாநில தலைவர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. மேலும் இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாவதோடு புதிய மாநில தலைவராக இன்றே நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.