
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்புறம் பாகிஸ்தான் இருக்கலாம் என்று நம்பப்படுவதால் அவர்களுடன் ஆன அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, வாகா எல்லையும் மூடப்பட்டுள்ளது. அதன் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததால் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பாகிஸ்தானும் ரத்து செய்துள்ளது.
இதனால் இருநாட்டு எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றிருந்த நிலையில் தாக்குதல் எதிரொலியாக தன்னுடைய பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு இந்தியா விரைந்தார். இதைத் தொடர்ந்து இன்று அவர் காஷ்மீருக்கு செல்கிறார். மேலும் அவர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு நேரில் சந்திக்க இருக்கிறார்.