ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வருடம் உடல் நலக்குறைவின் காரணமாக இறந்ததால் தற்போது இடைத்தேர்தல் வந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடைய நேரடி போட்டி என்பது உருவாகியுள்ள நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இன்று வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்நிலையில் இன்று இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அமைந்துள்ள 53 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே நேரம் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி இல்லாத பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட அந்த தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.