ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் நான்காவது நாளாக மீனவர்கள் திருவடி ஏந்தி பிச்சை எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் படகுகளை விடுவிக்கவும் இந்திய- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி போராட்டம் நடைபெற்றுள்ளது. மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, கச்சத்தீவில் மீன்பிடிக்க வழிவகை செய்யும் விதத்தில் இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் தேவை. மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இலங்கையின் வெளிநாட்டு மீனவர் தடை சட்டத்தால் அரங்கேறும் கொடுமைகள். மேலும் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை-இந்தியா இடையிலான மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என கூறியுள்ளார்.