
தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்த 17. 37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 63,000 மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் குரு தானிய சாகுபடி, வேளாண் இயந்திரங்களின் மதிப்பு கூட்டுதல், நுண்ணுயிர் பாசனம் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கிட 22.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரகப்பகுதிகளில் ஐந்து காளான் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.