உத்திரபிரதேச மாநிலம் சீத்தாப்பூர் மாவட்டத்தில் RTI ஆர்வலரும், பத்திரிக்கையாளருமான ராகவேந்திரா பாஜ்பாய் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ராகவேந்திரா பாஜ்பாய் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை சுட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராகவேந்திரா பாஜ்பாயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.