தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இன்று இரவு 12 மணி வரையில் சென்னையில் பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெள்ள அபாய எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் கூறியதாவது, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு வழங்கப்படும். மருத்துவ முகாம்களை நடத்தவும், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொது மக்களுக்கு
மருத்துவ சேவை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் மிக அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதிகளுக்கு புயலை வேடிக்கை பார்க்க எக்காரணத்தை கொண்டும் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.