
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடி நிதி பிரச்சனை குறித்து பேசினார். எவ்வளவுதான் விதி கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள் என பிரதமர் கூறினார் அதற்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர். மு க ஸ்டாலின் பேசியதாவது, நாங்கள் நிதி கேட்பது அழுகை அல்ல.
தமிழ்நாடு மக்களின் உரிமை. நான் அழுது புலம்புவனும் அல்ல. யார் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல. ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா? என குஜராத் முதலமைச்சராக நீங்கள் பேசியதை உங்களுக்கே நினைவுபடுத்துகிறேன் என கூறியுள்ளார்.