நாசாவின் Crew-10 குழு வெற்றிகரமாக ISS  விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்தது. SpaceX Dragon விண்கலத்தில் புறப்பட்ட இந்த குழுவில் நாசாவின் அனி மக்க்ளெய்ன், நிக்கோல் ஐயர்ஸ், ஜப்பானின் தகுயா ஓனிஷி, ரஷியாவின் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் உள்ளனர். Crew-10 குழுவின் வருகையால், நீண்ட நாட்களாக நிலைவெளியில் இருக்கும் Crew-9 குழுவினரை புவிக்கு திரும்ப அனுப்பும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் Boing Starliner விண்கலத்தில் புறப்பட்டு, தொழில்நுட்ப கோளாறுகளால் விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் புவிக்கு திரும்பவுள்ளனர்.

Starliner விண்கலத்தில் ஹீலியம் கசிவு மற்றும் திரஸ்டர் செயலிழப்பு ஏற்பட்டதால், Crew-9 குழுவினர் நீண்ட நாட்கள் விண்வெளியில்  தங்கியிருந்தனர். இதனால், நாசா அவர்களுக்காக புதிய SpaceX விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டது. ஆனால், புதிய விண்கலத்தின் பேட்டரி பழுது காரணமாக, அவர்கள் புவிக்கு திரும்பும் பயணம் மீண்டும் தள்ளிப் போனது.  இந்த தாமதம் அரசியல் சர்ச்சையாக மாறிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், SpaceX நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் SpaceX மூலம் பயணத்தை விரைவுபடுத்துவதாக உறுதியளித்தனர். இந்த நிலையில் ஸ்பேஸ் எக்சின் crew 10 குழு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அவர்கள் சென்ற பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச நிலையத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விரைவில் பூமிக்கு திரும்ப உள்ளனர்.