
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி.சாலை பகுதியில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கிய நிலையில் முதல் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டினை முன்னிட்டு பிரம்மாண்டமாக பந்தல் போடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடுவதற்கான பூமி பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 4:30 மணியளவில் விக்கிரவாண்டியில் பூமி பூஜை நடைபெற்றது.
இந்த விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். அதோடு விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட நிலையில் பந்தக்கால் நடும்போது தளபதி தளபதி என்று ரசிகர்கள் உற்சாகமாக முழங்கினார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.