தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் திமுக அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆறாம் தேதி அன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையின் முடிவாக அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை வழங்குவதை பெருமையாக பறைசாற்றும் இதே அரசு தான் மக்கள் நலனை கெடுத்து மதுவிற்கு அடிமையாகும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்து தான் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. எவ்வகையிலும் இது போன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது என பொதுமக்கள் கோபத்தில் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர். ஊழலில் காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே திமுகவின் ஆட்சி அதிகார வரலாறு. அமலாக்கத்துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால் இந்த டாஸ்மார்க் முறைகேட்டில் மட்டும் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் சிக்கும் என்று தெரிகிறது.