
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் டெலிகிராம் தளத்தை பயன்படுகிறார்கள். இது ஒரு தகவல் பரிமாற்ற செயலியாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ். இவர் telegram தளத்தில் சட்டவிரோத செயல்களை அனுமதித்த காரணத்திற்காக சமீபத்தில் பாரிஸ் ஏர்போர்ட்டில் வைத்து பிரான்ஸ் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது டெலிகிராம் சிஇஓ பாவேல் போலீஸ் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவரை பிரான்சிலிருந்து வெளியேறக்கூடாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் போலீஸ் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் பிரான்சிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.